கியூபா கரிபீயன் தீவுகளில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இந்த நாட்டில் அமைந்துள்ள மின் உற்பத்தி நிலையங்களில் பெரும்பாலானவை 40 ஆண்டுகளுக்கும் மேல் இயங்கி வருகின்றது. இதனால் அங்குள்ள மின் நிலையங்களில் அடிக்கடி பழுது ஏற்படுவது வழக்கம். இந்த பழுதினால் அந்நாட்டில் நாடு தழுவிய மின்வெட்டு ஏற்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்நாட்டில் மடான்சாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள மின் உற்பத்தி நிலையத்தில் பெரிய அளவிலான பழுது ஏற்பட்டுள்ளது. இந்த பழுதினால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு விநியோகம் தடை செய்யப்பட்டது. இதன் காரணமாக 11 மாகாணங்களில் மின்வெட்டு ஏற்பட்டு இருளில் மூழ்கியுள்ளது. இந்த மின்வெட்டினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பழுதை படிப்படியாக சரி செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.