துருக்கியில் ஏற்பட்ட நிலநடுப்பதினால் சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள மாகாணங்கள் முற்றிலுமாக சிதைந்துள்ளது. ஏற்கனவே உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட சிரியா நிலநடுக்கத்தினால் உருகுலைந்து போனது. நிலநடுக்கம் ஏற்பட்டு இரண்டு வாரங்களாகிய நிலையில் அதிலிருந்து இன்னும் மீண்டு வராத சிரியா தற்போது ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை சிரியாவின் ஹேம்ஸில் பகுதியில் உணவுப்பொருட்களை சேகரித்துக் கொண்டிருந்த மக்கள் மீது ஐ.எஸ் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 53 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இஸ்ரேல் சிரியா இடையே இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. சிரியாவில் ஈரானின் ஆதரவு பெற்ற பயங்கரவாதி குழுக்கள் இருப்பதாக அந்நாட்டில் மேல் இஸ்ரேல் அடிக்கடி வான் தாக்குதல் நடத்துவது வழக்கம். ஆனால் இதனை சிரியா முற்றிலுமாக மறுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இஸ்ரேல் தங்களின் ராணுவ நிலைகள் மற்றும் பொது உள்கட்டமைப்புகளை குறி வைத்தே தாக்குதல் நடத்துவதாக சிரியா குற்றம் சாட்டியுள்ளது.

இந்த நிலையில் சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் பகுதியில் நேற்று காலை இஸ்ரேல் ராணுவம் வான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த வான் தாக்குதல் சிரியாவின் ராணுவ வளாகங்களின் தாயகமாக விளங்கும் கபர் சூசா நகர் மீது நடத்தப்பட்டுள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட இந்த நகரின் மேல் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏராளமான குடியிருப்பு கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளது. அதோடு பொதுமக்களில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகின்றது.