வடகொரியா அவ்வப்போது ஏவுகணை பரிசோதனைகளை செய்து அண்டை நாடுகளை அச்சமடைய செய்து வருகின்றது. இந்த ஏவுகணை பரிசோதனைகளை கைவிடுமாறு அமெரிக்கா பலமுறை வடகொரியாவிடம் வலியுறுத்தியது. ஆனால் அதனை வடகொரியா கண்டுகொள்ளாமல் தொடர்ந்து ஏவுகணை பரிசோதனைகளை செய்து வருகின்றது. மேலும் வடகொரியா அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பகிரங்கமாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவதால் பதற்றம் நீடித்து வருகின்றது.

இந்த நிலையில் வடகொரியா குறுகிய தொலைவு செல்லக்கூடிய இரண்டு ஏவுகணைகளை கிழக்கு கடல் பகுதியை நோக்கி செலுத்தி பரிசோதனை செய்துள்ளது. இதனை தென்கொரியா நாடும் உறுதி செய்துள்ளது. இது குறித்து தென் கொரிய நாட்டின் முப்படைகளின் தளபதி கூறியதாவது “வடகொரிய நாட்டின் சுக்கான் பகுதியில் இருந்து இன்று காலை 7.00 மணி முதல் 7.11 மணிக்குள் குறுகிய தொலைவு செல்லக்கூடிய ஏவுகணைகள் ஏவ ப்பட்டுள்ளது. நாங்கள் தீவிர கண்காணிப் செய்து வருகிறோம். மேலும் அமெரிக்காவின் நெருங்கிய ஒத்துழைப்புடன் எங்களது ராணுவம் முழு அளவில் பயிற்சி பெற்ற தயாராக உள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.