பாகிஸ்தான் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. அந்த நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு தீர்ந்து போகும் நிலையில் உள்ளது. எனவே பாகிஸ்தான் விரைவில் திவால் ஆகிவிடும் என உலக நாடுகள் கூறுகின்றன. இந்த நிலையில் அந்நாட்டின் ராணுவம் மந்திரி கபஜா ஆசிப் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சியார்கோட் நகரில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

அங்கு அவர் பேசியதாவது “பாகிஸ்தான் திவால் ஆகிக்கொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் உண்மை என்னவென்றால் பாகிஸ்தான் திவாலாகி விட்டது. திவாலான நாட்டில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதற்கு அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் தான் பொறுப்பு. இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வு சர்வதேச நாணய நிதியத்திடம் இல்லை. அது நமது நாட்டிலேயே உள்ளது. தன்னை நிலை நிறுத்திக் கொள்ள பாகிஸ்தான் தனது சொந்த காலில் நின்றாலே போதும்” என்று அவர் கூறியுள்ளார்.