அமெரிக்க நாட்டில் மென்டானா பகுதியின் வான் பரப்பில் ராட்சத பலூன் ஒன்று பறந்து கொண்டிருப்பதை அந்நாட்டு ராணுவம் கண்டுபிடித்தது. இதனை அடுத்து அந்த பலூன் உளவு பார்ப்பதற்காக சீனாவால் அனுப்பப்பட்ட பலூன் தான் என அமெரிக்கா குற்றம் சாட்டியது. ஆனால் சீனாவோ “அது உணவு பலூன் அல்ல. வானிலை ஆய்வுக்காக அனுப்பப்பட்ட பலூன் திசை மாறி அமெரிக்காவுக்குள் நுழைந்து விட்டது” என தெரிவித்துள்ளது.

ஆனால் இதனை ஏற்க மறுத்த அமெரிக்கா போர் விமானம் மூலம் உணவு பலூனை சுட்டு வீழ்த்தியுள்ளது. இந்த விவகாரம் இரு நாடுகளிடையேயும் பெரும் மோதலாக உருவெடுத்தது. இந்த நிலையில் ஜெர்மனியில் நடைபெற்ற முனிச் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா வெளியறவு துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் மற்றும் சீன வெளியுறவுத் துறை மந்திரி வாங் யி ஆகிய இருவரும் சென்றுள்ளனர். அங்கு மாநாட்டின் இடையே இருவரும் நேரில் சந்தித்து பேசி உள்ளனர்.

அதில் அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் கூறியதாவது “உளவு பலூன் அமெரிக்காவில் நுழைந்ததால் அதன் இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டம் மீறப்பட்டுள்ளது. மேலும் உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு எந்தவித பொருள் உதவியும் சீனாவால் வழங்கப்படக் கூடாது. அவ்வாறு வழங்கினால் சீனா பொருளாதார தடைகளை எதிர்கொள்ள நேரிடும். அதோட சீனாவுடன் ஆரோக்கியமான போட்டியை மட்டுமே அமெரிக்கா விரும்புகிறது. மோதலையோ பனிப்போரையோ விரும்பவில்லை” என அவர் கூறியுள்ளார்.