மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான பாரீக் பல இடங்களில் துணி நூல்களை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார். தொழில் ரீதியாக அவருக்கு கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த நூல் வியாபாரிகளான ரமேஷ் காஜா உசேன் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 1999-ஆம் ஆண்டு ரமேஷ், காஜா உசேன் ஆகியோரிடம் நூல்கள் வாங்குவதற்காக 18 லட்சத்து 50 ஆயிரத்து 972 ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் கூறியபடி அவர்கள் நூல்களை அனுப்பி வைக்கவில்லை.

இதுகுறித்து கேட்டபோது விரைவில் நூல்களை அனுப்பி வைப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இருவரும் கொடுத்த காசோலையை வங்கியில் போட்ட போது பணம் இல்லாமல் திரும்ப வந்தது. இவ்வாறாக தொடர்ந்து இருவரும் பாரீக்கை ஏமாற்றி வந்தனர். இதுகுறித்து பாரீக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.