சிகாகோ நகரில் பழைய பொருட்களை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலை 2 லட்சத்து 30 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொழிற்சாலையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ மலமளவென ஆலை முழுவதும் பரவியதால் அங்கு இருந்த பொருட்கள் அனைத்தும் வெடித்து சிதறியது. இதனால் அடர்த்தியான கரும்புகையும் தீ பிழம்புகளும் வானுயரத்திற்கு பரவியது.

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ விபத்து ஏற்பட்டபோது ஆலைக்குள் தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் உயிரிழப்புகள் எதுவும் நிகழவில்லை. மேலும் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.