துருக்கி, சிரியா-வில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,000 தாண்ட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது. துருக்கி, சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதிகள் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவரை நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக வேதனை தகவல்கள் வெளியாகி உள்ளன.

5,000-திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. துருக்கி-க்கு இந்தியா உக்கரைன் உள்ளிட்ட நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. இந்த நிலையில் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 20,000-த்தை தாண்ட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.