கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உப்பு காச்சிப்பட்டி பகுதி உள்ளது. இங்கு சாலையோரம் பிறந்த குழந்தை ஒன்று நேற்று முன்தினம் கிடந்தது. அந்த குழந்தை பிறந்து 2 1/2 மணி நேரமே ஆன நிலையில் தொப்புள் கொடியை கூட வெட்டாமல் சுடிதார் துணியில் சுற்றி போட்டுவிட்டு சென்றுள்ளனர். அப்போது குழந்தை அழுகுரல் சத்தம் கேட்டதால் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் இருட்டுக்குள் கிடந்த அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு குழந்தைக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் தற்போது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தை சிகிச்சை பெற்று வரும் நிலையில் குழந்தையின் உடலில் இருந்த சிறு சிறு காயங்கள் குணமாகி வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.