நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி பகுதியில் வசிப்பவர் கார்த்திகேயன். இவருடைய மனைவி ராதிகா. மகள் திவ்யா. திவ்யா 12-ம் வகுப்பு முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த ஒன்பதாம் தேதியன்று திவ்யா தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .
மக்கள் இறந்த துக்கத்திலிருந்து மீள முடியாமல் இருந்த அவருடைய தாயார் ராதிகா நேற்று அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார். இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
