சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்றும் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 57 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதன் பிறகு ஒரு கிராம் 7145 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்து ஒரு கிராம் 7650 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் 61,200 ஆகவும் இருக்கிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 101 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளி 1,01,000 ரூபாயாகவும் இருக்கிறது. மேலும் கடந்த‌ 18-ம் தேதி முதல் ‌4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 1680 வரை உயர்ந்துள்ளது. இது நகைப்பெரியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.