பொதுவாக பலருக்கும் அப்பளம் மிகவும் பிடிக்கும். தற்போது instagram-ல் வைரலாகும் ஒரு வீடியோவில் ஒரு பெண் அப்பளம் தயாரிக்கும் முறையை பார்த்து இனி வாழ்க்கையில் அப்பளம் சாப்பிட வேண்டும் என்ற ஆசையே வெறுத்து விடும் என்ற அளவிற்கு நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதாவது முதலில் ஒரு பெண் பெரிய களிமண் அடுப்பில் ஒரு அண்டாவை வைத்து அப்பள மாவை தோசை போல தேய்த்து எடுக்கிறார்.
அதை மற்றொரு பெண் எடுத்து காயவைத்த நிலையில் இன்னொரு பெண் வந்து அந்த அப்பள மாவை ஒன்றாக வைத்து அடுக்கினார். பின்னர் வட்ட வடிவில் இருக்கும் டிபன் பாக்ஸ் மற்றும் மூடிகளை வைத்து காலால் ஏறி நின்று மிதித்து அதனை வட்ட வடிவ அப்பளமாக மாற்றி பின்னர் காய வைக்கிறார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலான நிலையில் பலரும் இனி எப்படி அப்பளத்தை சாப்பிட தோன்றும் இதை பார்க்கும் போதெல்லாம் இந்த ஞாபகம் தானே வரும் என்று அதிர்ச்சிக்குரிய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் ஒரு பயனர் வீடியோ தொடக்கத்தில் நன்றாக இருந்தது எனவும் முடிவில் இப்படி செய்து விட்டீர்களே எனவும் வேதனை தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
