தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து முக்கியத் தகவலைப் பகிர்ந்துள்ளார். “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற பழமொழியை மேற்கோள் காட்டிப் பேசிய அவர்,
தற்பொழுது தை மாதம் பிறந்திருப்பதால், அடுத்த 30 நாட்களுக்குள் கூட்டணி குறித்த ஒரு நல்ல செய்தி வெளியாகும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்த அறிவிப்பு அவரது ஆதரவாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போடிநாயக்கனூர் தொகுதியிலேயே போட்டியிடுவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, “அதனை மக்கள் தான் முடிவு செய்வார்கள்” என்று பக்குவமாகப் பதிலளித்தார் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஓ.பி.எஸ்-ஸின் இந்த 30 நாள் கெடு மற்றும் கூட்டணி குறித்த அறிவிப்பு தமிழக அரசியலில் உற்றுநோக்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது.
