மே 2024 CA தேர்வு எழுதுபவர்கள், தேர்வு எழுதும் மையத்தை மாற்றிக் கொள்ளலாம் என ICAI தெரிவித்துள்ளது. இடைநிலை, குரூப் 1, குருப் 2, சர்வதேச வரி மதிப்பீட்டுத் தேர்வுகள் வரும் மே மாதம் தொடங்குகிறது. தேர்வு எழுதுவோர் தேர்வு எழுதும் இடம், குரூப் மற்றும் மொழியை, வரும் மார்ச் 27 முதல் 29ஆம் தேதி வரை eservices.icai.org என்ற இணையதளத்தில் மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.