மே.3ல் நடைபெற உள்ள வனப்பாதுகாவலர் முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.  9 வனப்பாதுகாவலர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த டிசம்பரில் அறிவிக்கப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தொடர்ந்து, கணினி வழித்தேர்வு மட்டும் நடைபெறும் இத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் தற்போது வெளியாகியுள்ளது. இதனை www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.