அடுத்த நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் தற்போது தமிழ்நாடு காண நிதி உரிமையை கேட்டு தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு முக்கிய பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, வழக்கமாகச் சொல்லும் திருக்குறளோடு சேர்த்து, தேர்தலை மனதில் வைத்தேனும் தமிழ்நாட்டுக்கான பின்வரும் அறிவிப்புகள் இடம்பெறுமா?
விடுவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் படிப்புக்கான 3,548 கோடி ரூபாய் கல்வி நிதி
கோவை, மதுரை மெட்ரோ இரயில்,
தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுத்தி வரும் #JalJeevan திட்டத்துக்கான 3,112 கோடி ரூபாய் நிதி,
புதிய இரயில்வே திட்டங்கள்,
நிதி ஆணையம் பரிந்துரைத்தபடி ஒன்றிய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50% நிதிப் பகிர்வு.
இன்னும் பட்டியல் இருக்கிறது. தேர்தலை மனதில் வைத்தாவது இம்முறை தமிழ்நாட்டுக்கான அறிவிப்புகளைத் தவறாமல் வெளியிடுவீர்கள் என எதிர்பார்க்கிறோம். அவை மதுரை #AIIMS போல அறிவிப்போடு நின்றுபோகாமல், முறையான நிதி ஒதுக்கீட்டுடன் குறித்த காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கோருகிறோம் என்று பதிவிட்டுள்ளார்.
