கூட்டுறவு சங்கம் கடன் தள்ளுபடி குறித்து கூறிய அமைச்சர் துரைமுருகன் : கூட்டுறவு சங்கங்கள் மூலம் மக்கள் கடன் வாங்கும்போது, அதனை அரசு தள்ளுபடி செய்துவிடும் என்ற நோக்கத்திலையே கடன் வாங்குகின்றனர். அப்படியில்லை கடனை பெற்றால் மக்கள் அதனை திருப்பி கட்ட வேண்டும். கடனை கட்டவில்லை என்றால் கூட்டுறவுத்துறையே இருக்காது, கடன் தள்ளுபடி என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் கடனை வாங்க கூடாது, என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கடனை திருப்பி கட்ட வேண்டும் என்பதை விட ரத்து செய்ய வேண்டும் என்ற கோஷ்மே அதிகம், அப்படி இருந்தால் எந்த துறையும் நிற்காது, அரசாங்கமும் நிற்காது என்றார். இதனால் தேர்தல் வரும் கடன் தள்ளுபடியாகும் என்று நினைத்த மக்களுக்கு சற்று ஷாக் ஆகியுள்ளனர்.