மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி தற்போது டெல்லியில் அரசியலில் அனல் பறந்து வருகிறது. பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறது. மோடியின் 400 என்ற கனவை காலியாகி தனி பெரும்பான்மை கூட கிடைக்காமல் செய்துவிட்டோம் என்ற கொண்டாட்டத்தில் காங்கிரஸ் உள்ளது. தமிழ்நாடு புதுச்சேரியில் 400க்கும் 400 வென்று விட்டோம் என்று திமுக வெடி வெடித்து கொண்டாடி வருகிறது. இந்த பரபரப்பில் அதிமுக தொண்டர்கள் மட்டும் சோகத்தில் இருக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக வாக்கு வங்கி குறைந்து வருகிறது . ஓபிஎஸ் ராமநாதபுரம் தொகுதியில் பலாப்பழ சின்னத்தில் இறக்கிவிடப்பட்டு தோல்வியை தழுவினார். இதற்கிடையில் அதிமுகவினர் அனைவரும் ஒன்றுபடுவார்களா? என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான 4ஆம் தேதி இபிஎஸ் சேலத்தில் இருந்தார். முடிவு எப்படி இருக்கும் என ஓரளவு அவர் கணித்து இருந்ததாகவும், இதனால் சென்னையில் இருந்தால் தலைமைக் கழகம் சென்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய சூழல் ஏற்படும் என கருதி, ஜெயக்குமாரிடம் பதிலளிக்க வேண்டிய பொறுப்பை ஒப்படைத்து விட்டு அவர் சேலத்துக்கு சென்றதாகவும் அதிமுக வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.