திமுக எம்பி கனிமொழி அவர்கள் பாஜகவின் “டபுள் இன்ஜின்” அரசை “மக்கர் இன்ஜின்” என்று கிண்டலாக விமர்சித்திருந்த நிலையில், அதற்கு பாஜகவின் நயினார் நாகேந்திரன் செம காட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளார். “திமுக – காங்கிரஸ் கூட்டணிதான் இப்போது உண்மையான மக்கர் கூட்டணியாக இருக்கிறது” என்று சாடிய அவர், வார்த்தைப் போரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். தேர்தலுக்கு முன்பாக நடக்கும் இந்த மோதல், தமிழக அரசியல் களத்தில் “இன்ஜின்” அரசியலை இன்னும் சூடாக்கியுள்ளது.

​மேலும் பேசிய நயினார் நாகேந்திரன், “சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு யார் மக்கர் இன்ஜின், யார் வெறும் டப்பா இன்ஜின், யார் அதிவேகமாகப் பாயும் வந்தே பாரத் இன்ஜின் என்பது ஊருக்கே தெரிந்துவிடும்” என்று சவால் விட்டுள்ளார். 2026 தேர்தலை இலக்காக வைத்துப் பேசப்பட்டுள்ள இந்த “இன்ஜின்” வசனங்கள், சமூக வலைத்தளங்களில் வைரலாகி விவாதத்தைக் கிளப்பியுள்ளன. யார் டாப் கியரில் போகப்போகிறார்கள், யார் பாதிலேயே நிற்கப்போகிறார்கள் என்பதைப் பார்க்க மக்களும் ஆவலாகக் காத்திருக்கின்றனர்!