தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்காகத் தீவிரமாகத் தயாராகி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, வரும் டிசம்பர் 18ஆம் தேதி ஈரோட்டில் நடைபெறவிருக்கும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் விஜய் உரையாற்ற இருக்கிறார். இவ்வாறு பரபரப்பான அரசியல் மற்றும் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுள்ள விஜய், அதற்கு நடுவே ஒரு தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டதாக தகவல் வெளியானது. அதாவது அவர் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து கோவாவுக்குப் புறப்பட்டுச் சென்றார் என்றும்

இந்தப் பயணத்தின்போது அவருடன் நடிகை திரிஷா, விஜய்யின் உதவியாளர் ஜெகதீஷ், மற்றும் தனிப்பட்ட பாதுகாவலர்கள் உள்ளிட்டோர் உடன் சென்றதாக தகவல் வெளியானது. ஆனால் உண்மையில் இது உண்மை இல்லை என்றும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் கோவாவிற்கு சென்றது தான் இந்த வருடம் சென்றது போல் தவறாக பரவி வருவதாக கூறப்படுகிறது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் இது போன்ற பொய்யான செய்திகள் பரவுவது தவெக தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது