தமிழகத்தில் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தங்கள் கட்சிகளில் இருந்து விலகி மாற்றுக் கட்சியில் சமீப காலமாக இணைந்து வருவது பரபரப்பாக பேசப்படுகிறது. குறிப்பாக தமிழக வெற்றி கழகத்தில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இணைவார்கள் என செங்கோட்டையன் மற்றும் விஜய் கூறி இருந்த நிலையில் சமீப காலமாக அது அரங்கேறி வருகிறது.
அந்த வகையில் அதிமுக மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து புரசை வி.எஸ் பாபு சமீபத்தில் நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து தற்போது அவர் அதிமுக கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக்கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் தேர்தல் நேரத்தில் அதிமுக கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் கட்சியிலிருந்து இவ்வாறு விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
