தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். நடிகர் விஜய் கட்சி தொடங்கி ஒரு வருடம் முடிவடைந்து விட்ட நிலையில் சமீபத்தில் இரண்டாம் ஆண்டு துவக்க விழா விஜய் தலைமையில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுக்குழு கூட்டம் வருகிற 28ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இதனை முன்னிட்டு அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது,பொதுக்குழு கூட்டம் நடைபெற இருப்பதை முன்னிட்டு அதனை மேற்பார்வை செய்வதற்காக ஐந்து பேர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்களுக்கு கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார். மேலும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் விஜய் போட்டியிட இருக்கும் நிலையில் கண்டிப்பாக முதல் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் அவர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

