டெல்லியில் பாஜாக தேசிய தலைவர்களுடன் முக்கிய ஆலோசனைகளில் ஈடுபட்டு வரும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தற்பொழுது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்துப் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
அண்ணாமலை டெல்லிக்குச் சென்று பாஜாக தேசிய தலைவர் நிதின் நபினை முதலில் சந்தித்துத் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளார். தனது பதவியை ராஜினாமா செய்துள்ள இத்தகைய பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில்தான், அவர் தற்பொழுது மத்திய அமைச்சர் அமித்ஷாவையும் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்துப் பேசப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அண்ணாமலையின் இந்த அதிரடி ராஜினாமா மற்றும் அடுத்தடுத்து நடக்கும் டெல்லி சந்திப்புகள் கோட்டை வட்டாரத்தில் பெரும் அசைவுகளை ஏற்படுத்தியுள்ளன.
அண்ணாமலையின் இந்த அரசியல் சந்திப்புப் புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் மத்தியில் படுவேகமாகப் பகிரப்பட்டு இணையம் எங்கும் செம வைரலாகி வருகிறது.
