தமிழகத்தில் தவெக ஆளுங்கட்சியாகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், எதிர்க்கட்சியான திமுக-வுக்குப் பலத்த அடி கொடுக்கும் வகையில் பூந்தமல்லியில் பிரம்மாண்ட கட்சித் தாவல் அரங்கேறியுள்ளது. பூந்தமல்லி தொகுதி தவெக எம்.எல்.ஏ. பிரகாசம் முன்னிலையில், முன்னாள் திமுக நகர செயலாளரான ரவிகுமார் தனது கட்சியின் செயல்பாடுகளில் இருந்து முற்றிலும் விலகி, தவெக-வில் இணைய முடிவு செய்தார்.

​இதனைத் தொடர்ந்து, ரவிகுமார் தலைமையில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் அணிவகுத்து, பிரம்மாண்ட பைக் பேரணியாகச் சென்று ஆளுங்கட்சியான தவெக-வில் தங்களை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டனர். பூந்தமல்லி தவெக எம்.எல்.ஏ பிரகாசம் முன்னிலையில் எதிர்க்கட்சியான திமுக-வின் முக்கியப் பிரமுகர் 1000 ஆதரவாளர்களுடன் ஆளுங்கட்சியில் ஐக்கியமாகியுள்ள இந்த அதிரடி விவகாரம், திமுக கோட்டையை அதிர வைத்துள்ளதுடன் சோஷியல் மீடியாவிலும் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.