தெற்கு ரயில்வே நிர்வாகத்தில் வேலை இருப்பதாக கூறி தற்போது மோசடிகள் அரங்கேறி வருகிறது. இந்த புதிய வகை மோசடி குறித்து தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு தெரிய வந்த நிலையில் அவர்கள் ஒரு எச்சரிக்கை அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக தெற்கு ரயில்வே சென்னை மண்டலம் மேலாளர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் உண்மையான வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்புகள் ரயில்வே ஆட் சேர்ப்பு வாரியமான RRB மூலமாக மட்டுமே வெளியாகும். எனவே ரயில்வே துறையில் வேலை இருப்பதாக கூறி பணம் கேட்கும் தனிநபர்கள் மற்றும் ஏஜென்சிகளை நம்ப வேண்டாம். மேலும் பொதுமக்கள் அனைவரும் இது போன்ற மோசடிகளில் இருந்து உஷாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Beware of fake railway job offers! Genuine recruitment is only through the Railway Recruitment Board(RRB). Verify before applying. Don’t trust individuals or agencies asking money to offer jobs.#JobScamAlert #RailwayJobs pic.twitter.com/klXqO6CPog
— DRM Chennai (@DrmChennai) July 24, 2024
