சென்னையில் உள்ள முகப்பேர் பகுதியில் 19 வயது இளம் பெண் ஒருவர் சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு வாலிபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் புகார் கொடுத்த நிலையில் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது ஒரு டாஸ்மாக் கடையில் வாலிபர் ஜிபே மூலமாக பணம் செலுத்தியது தெரிய வந்தது.

பின்னர் அந்த ஜிபே நம்பரை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் சரத்பாபு (31) என்பவர் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர் இதுபோன்று தெருவில் நடந்து செல்லும் பல பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இவர் ஒரு தனியார் வங்கியில் கலெக்சன் ஏஜெண்டாக பணி புரிந்து வருகிறார். மேலும் இவரை கைது செய்த போலீசார் தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.