மெக்சிகோவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் அரங்கேறிய நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் பலரது இதயங்களை வென்றுள்ளது. அங்குள்ள மினிசோ கடைக்குள் நுழைந்த ஒரு தெருநாய், அங்கிருந்த ஒரு மென்மையான பொம்மையைக் கவ்விக்கொண்டது.
அந்த பொம்மையை வாயிலிருந்து விட மறுத்த அந்த நாய், அதைத் தன்னுடன் எடுத்துச் செல்ல மிகவும் ஆசைப்பட்டது. கடையின் ஊழியர் அந்தப் பொம்மையை மீட்க முயன்றும், அந்த நாய் அதை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு நின்றது. இதைக் கண்ட அங்கிருந்த வாடிக்கையாளர்கள் அந்த நாயின் அன்பைக் கண்டு நெகிழ்ந்து போனார்கள்.
View this post on Instagram
“>
மேலும் உடனடியாக அங்கிருந்த சில நல்ல உள்ளங்கள் ஒன்று சேர்ந்து, அந்த நாய்க்காக அந்தப் பொம்மையின் விலையைச் செலுத்தி அதை வாங்கித் தந்தனர். தனது புதிய பொம்மையுடன் அந்த நாய் மகிழ்ச்சியாக வாலாட்டிக்கொண்டு கடையை விட்டு வெளியேறிய காட்சி வைரலானது.
இந்நிலையில் அத்துடன் இந்த கதை முடிந்துவிடவில்லை; இந்த வீடியோவைப் பார்த்த ஆலன் என்ற நபர், அந்த நாயைத் தேடிச் சென்று முறைப்படி தத்தெடுத்துக் கொண்டார். ஒரு சிறு பொம்மையின் மீது அந்த நாய் காட்டிய அன்பு, இன்று அதற்கு ஒரு நிரந்தரமான வீட்டையும் பாசமான ஒரு உரிமையாளரையும் பெற்றுத் தந்துள்ளது.
