சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இன்று முதல் தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படாது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. சென்னையிலிருந்து கன்னியாகுமரி நெல்லை தென்காசி தூத்துக்குடி விருதுநகர் மதுரை மற்றும் ராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளும் இன்று முதல் கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து மட்டுமே இயக்கப்படும்.

கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 710 பேருந்துகளும் மாதவரத்தில் இருந்து 170 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்த சந்தேகங்களை தீர்க்க கீழ்கண்ட உதவி எண்களை தொடர்பு கொள்ளுங்கள்.

7845700557
7845727920
7845740924
7845764345