தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆண்டு தோறும் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழா, கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் விழாவாகத் தொடங்கியது.

இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாகும் சூரசம்ஹாரம், அக்டோபர் 27 ஆம் தேதி மாலை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, அந்த நாளில் திருச்செந்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் கூட்டம் கூடும் என்பதால், தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இதுகுறித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.