தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் நீதியை நிலை நாட்டியுள்ளதாக எம்பி கனிமொழி வரவேற்றுள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பை அடுத்து வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான அமர்வு வாதங்களை கேட்ட பிறகு உடனடியாக தீர்ப்பளித்தது.

மேலும் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பாக கையாண்டதாக உச்ச நீதிமன்றம் பாராட்டு தெரிவித்தது. ஸ்டெர்லைட் வழக்கை சென்னை ஹைகோர்ட் விசாரித்ததில் வரம்பு மீறல் இருந்ததாக கருதவில்லை. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் சென்னை உயர்நீதிமன்றத்தின் முடிவில் தலையிட அவசியம் இல்லை. ஸ்டெர்லைட் ஆலை விதிமுறைகளை மீறி செயல்பட்டதன் அடிப்படையில் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. வேதாந்தா தரப்பு, தமிழக அரசு தரப்பு, சுற்றுச்சூழல் ஆர்வலர் தரப்பு வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்ற மனுவை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் நீதியை நிலை நாட்டியுள்ளதாக எம்பி கனிமொழி வரவேற்றுள்ளார். திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், “ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான நீண்ட நாள் போராட்டத்தின் பலனாக, இன்று உச்சநீதிமன்றத்தில் நீதியை நிலைநாட்டிடும் தீர்ப்பு வந்திருக்கிறது. தூத்துக்குடி மக்களின் பல நாள் போராட்டத்தின் வெற்றி இன்றைய தீர்ப்பு. இந்த போராட்டத்தில் தொடர்ச்சியாக வழிகாட்டும் விதமாக மக்களுடன் நின்ற தமிழ்நாடு முதலமைச்சர் திரு. முக ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.