தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே லாரியை ஏற்றி முன்னாள் ஊராட்சி தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கொல்லம்பரம்பு ஊராட்சித் தலைவராக பதவி வகித்திருந்த முத்து பாலகிருஷ்ணன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கல்குவாரிக்கு 650 ஏக்கர் நிலம் வாங்கி கொடுத்ததிலும் உள்ளாட்சித் தேர்தல் முன் விரோதத்தாலும் கொலை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்விரோதம் காரணமாக முத்து பாலகிருஷ்ணனை லாரியை ஏற்றி கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முத்துகிருஷ்ணனின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
