ஓடிக்கொண்டிருக்கும் ரயிலில் தூங்கிக் கொண்டிருந்த பெண் பயணியின் முகத்தில் நபர் ஒருவர் வேணும்னே சிறுநீர் தெளித்த அருவருக்கத்தக்கச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. ரயிலில் பயணிகள் சென்று கொண்டிருந்த போது, ஜன்னல் அருகே அமர்ந்திருந்த ஒரு நபர் அநாகரீகமான முறையில் சிறுநீர் கழித்ததுமன்றி, பக்கத்து சீட்டில் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்த பெண் பயணியின் முகத்தில் வேணும்னே அந்த சிறுநீரைத் தெளித்து விட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்து விழித்த அந்தப் பெண்ணும், ரயிலில் இருந்த மற்ற பயணிகளும் அந்த நபரைச் சூழ்ந்துகொண்டு சரமாரியாகக் கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கிருந்த பயணிகள் சிலர் இந்த அசிங்கமான சம்பவத்தை அப்படியே தங்களது மொபைல் போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
इस हरामखोर इंसान को देखो,जो खिड़की में से पेशाब करके इस लेडीज़ के ऊपर छिड़क देता है🙄😡,ऐसे ऐसे लोग धरती के बोझ पड़े हुए हैं
मारो सब के सब मिलकर, और इसका टुल्लू काट दो की ये पेशाब भी करने लायक न रह जाये😡😡 pic.twitter.com/cH62wtj4lO— PRARTHANA SINGH (@PrarthaSingh83) June 9, 2026
“பூமிக்குப் பாரமாக இருக்கும் இதுபோன்ற மனித மிருகங்களை நடுரோட்டில் வைத்து மிதிக்க வேண்டும்” என நெட்டிசன்கள் தங்களின் கடும் ஆத்திரத்தை இணையத்தில் கொட்டி தீர்த்து வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து அந்த நபரை உடனடியாகக் கைது செய்துள்ளனர்.
