தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை நகரில் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த குப்பம் பெருமாள் என்பவருடைய மகள் சிவரஞ்சனி. இவருக்கும் உசிலம்பட்டி பகுதியில் உள்ள சர்க்கரை பட்டி கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். விஜயகுமார் போர்வெல் போடும் தொழில் செய்வதால் அடிக்கடி வெளியூர் சென்று விடுகிறார். இதனால்  சிவரஞ்சனி தன்னுடைய தந்தை வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் சிவரஞ்சனி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உத்திரத்தில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து குப்பம் பெருமாள் பட்டுகோட்டை நகர போலீசில் சிவரஞ்சனியின் தந்தை புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.