இன்றைய காலகட்டத்தில் தினம்தோறும் புதுவிதமான வீடியோக்கள் காண்போரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. மனதில் உள்ள கவலைகளை மறக்க சில வீடியோக்களை பார்ப்பதால் மனமும் ஆறுதல் அடைகிறது. தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் துள்ளுவதோ இளமை என்ற பாடலுக்கு 65 வயது மூதாட்டி இளமையாக நடனமாடியுள்ளார்.

இந்த காணொளியில் அவர் நீல புடவை கட்டிக்கொண்டு தலையில் மல்லிகை பூவை வைத்துக்கொண்டு துள்ளுவதோ இளமை பாடலுக்கு நடனமாடியுள்ளார். இதனைப் பார்த்த பலரும் 65 வயது என்று நம்ப முடியவில்லை என்று கருத்துக்களை பதிவிட்டு வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.