பொதுவாகவே வீட்டில் கொசு தொல்லை அதிகமாக தான் இருக்கும். கொசுக்கள் பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் அது பரப்பும் டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்கள் மனிதர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. கொசுக்களிடமிருந்து தப்பிப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டாலும் சில நேரங்களில் அவற்றை தடுக்க முடியாது. அப்படியான நிலையில் சில செடிகளை வீட்டில் சுற்றுப்புற சூழலில் வளர்ப்பதால் கொசுக்களிடம் இருந்து தப்பிக்க முடியும்.

அதன்படி சாமந்தி பூக்களில் காணப்படும் லிமோனின் என்ற சேர்மம் பூச்சி விரட்டியாக செயல்படுவதால் வீட்டில் சாமந்தி பூ வளர்க்கலாம்.

லாவண்டர்: இதனை பிரஷ்ஷாக அல்லது காய்ந்த வடிவில், எண்ணெய் வடிவில் கொசுக்கள் அல்லது பூச்சிகளை விரட்ட பயன்படுத்தலாம்.

பூனைக்கீரை: இதில் காணப்படும் நெப்பிட்டா கட்டறியா என்ற கலவையானது கொசுக்களை விரட்ட பயன்படுத்தப்படுகிறது.

லெமன் கிராஸ் என்ற செடியை வீட்டில் வளர்ப்பதால் அதில் இருக்கும் வலிமையான வாசனை கொசுக்கள் மட்டுமின்றி எலிகளையும் விரட்ட கூடியவை.

ரோஸ் மரி செடியை வீட்டில் வளர்ப்பது மிகவும் நல்லது. இது ஒரு சிறந்த கொசு விரட்டியாகும். இது வீட்டை பூச்சிகள் இல்லாமல் பாதுகாக்க உதவுகிறது.