
உத்தர்காண்டில் நவம்பர் 12 அன்று சுரங்க பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. தற்போது துளையிடும் பணியில் எலி வளை நிபுணத்துவ தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர்களை வைத்து இடிபாடுகளை அகற்றுவது கடினமான பணி என்றாலும் தற்போது இது ஒன்றுதான் சிறந்த வழி என்பதால் இது தேர்ந்தெடுக்கப்பட்டு துளையிடும் பணி தொடர்ந்தது.
இந்நிலையில் துளையிடும் பணி முடிந்து முடிந்துவிட்டது. இதனால் தொழிலாளர்களை மீட்கவும் உடனடி மருத்துவ சிகிச்சை கொடுக்கவும் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவர்கள் தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் உறவினர்கள் அப்பகுதியில் குவிந்துள்ளனர்.