துலாம் ராசி அன்பர்களே,

இன்று விட்ட குறை தொட்ட குறை எல்லாம் சரி செய்ய முடியும். மாலை நேரம் மகிழ்ச்சியாக அமையும். எதையும் சமாளித்து வெற்றி பெறும் சூழல் உள்ளது. அடுத்தவர்கள் வியக்கும் படி நடந்து கொள்வீர்கள். ரகசியங்களை பாதுகாப்பது நல்லது. இஷ்ட தெய்வத்தின் கருணையால் நல்லது நடக்கும்.

தொழில் வியாபாரம் வளர்ச்சி பாதையை ஏற்படுத்திக் கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். மாலை நேரத்தில் உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. அரசு காரியங்களில் முன்னேற்றம் ஏற்படும். இன்று பெண்கள் சிரித்த முகத்துடன் காணப்படுவீர்கள். அடுத்தவர்களிடம் பேசும் போது கவனமாக இருங்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும். காரிய வெற்றி ஏற்படும்.

இன்று மாணவர்கள் மிகச் சிறப்பாக செயல்பட முடியும். சில பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். ஆராய்ச்சி தொடர்பான விஷயங்களில் நாட்டம் செல்லும். இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து விட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்: இரண்டு ஆறு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்டம் நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்