விருச்சிகம் ராசி அன்பர்களே, 

இன்று தயவு செய்து உணவு கட்டுப்பாடு என்பது கண்டிப்பாக வேண்டும்: வயிறு கோளாறுகள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். இன்று உறவினர்கள் உங்களிடம் அதிக பாசத்துடன் நடந்து கொள்வார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகள் விலகி செல்லும். சுப செலவுகள் செய்து மகிழும் சூழல் உள்ளது.

முக்கிய இடத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகப் பணிகள் கொஞ்சம் அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதி குறைவு ஏற்பட்டு பின்னர் சரியாகும். சில நேரங்களில் பழைய நினைவுகளில் மூழ்கி காணப்படுவீர்கள். இன்று பெண்களுக்கு இஷ்ட தெய்வத்தின் அருள் துணையாக இருக்கும். திருமணம் முயற்சிகளை மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

இன்று மாணவர்கள் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும். நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். மூடநம்பிக்கைகளில் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டாம். இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து விட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: 1 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்