தனுசு ராசி அன்பர்களே, 

இன்று உங்களுடைய தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். கவலைப்படாமல் சில பணிகளை மேற்கொள்ளுங்கள். சந்திராஷ்டமம் இருப்பதால் சில பணிகள் தாமதமாக முடியும். எளிமையாக பணிகளை முடிக்க தயாராக இருங்கள். தொழில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள்.

செய்யும் காரியங்களில் கவனமாக இருங்கள். இன்று எதிர்நீச்சல் போட்டு வாழ்க்கை வளமாக்கிக் கொள்ள முடியும். கொடுக்கல் வாங்கலை ஒழுங்குப்படுத்தி கொள்ளுங்கள். நிதானமான செயல் வெற்றியை கொடுக்கும். சந்திராஷ்டமம் இருப்பதால் அடுத்தவர்களுக்கு உதவுவதாக சென்று சிக்கலில் சிக்கிக் கொள்ள வேண்டாம். இன்று பெண்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். இறை வழிபாட்டில் நம்பிக்கை கொள்ள வேண்டும். பொறுமையாக இருப்பது நல்லது.

இன்று மாணவர்கள் தைரியமாக இருக்க வேண்டும். கல்வி பற்றிய சிந்தனையை ஒரு நிலை படுத்த வேண்டும். உயர்கல்வி ஆர்வத்தை கொடுக்கும். இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து விட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: ஐந்து மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்