கன்னி ராசி அன்பர்களே, 

இந்த நன்மைகள் கண்டிப்பாக நடைபெற கூடும். காரியங்களும் அற்புதமாக நடக்கும். எந்த செயலிலும் சிந்தித்து ஈடுபடுங்கள். சுய தேவைகள் பூர்த்தியாகும். உறவுகளால் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். உங்கள் நல்ல மனதை மற்றவர்கள் புரிந்து கொள்ளும் காலநிலை அமையும். இனிய கனவுகள் மேம்படும்.

உறவினர்கள் அன்பு பாசத்துடன் நடந்து கொள்வார்கள். தொழில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். தாராள பணவரவு இருக்கும். அறிமுகம் இல்லாதவர்களிடம் எந்த பேச்சுக்களும் வேண்டாம். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் கண்டிப்பாக நடக்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் திறமையால் வெற்றி பெறுவீர்கள். பெண்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை அமையும். கையில் காசு பணம் புரளும். இஷ்ட தெய்வத்தின் அருள் துணையாக இருக்கும்.

இன்று மாணவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்வீர்கள். அனைவரின் சொல்லுக்கும் மதிப்பு கொடுப்பீர்கள். கல்வியில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்வீர்கள். இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து விட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: ஐந்து ஏழு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை மற்றும் மஞ்சள் நிறம்