ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்ற நிலையில் சந்திரபாபு நாயுடு முதல்வராகப் பொறுப்பேற்க இருக்கிறார். இந்த தேர்தலில் பாஜகவுடன் தெலுங்கு தேசம் மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி கூட்டணி வைத்து போட்டியிட்டது. இந்நிலையில் தற்போது 25 பேர் அடங்கிய ஆந்திர அமைச்சரவை பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் இடம்பெற்றுள்ளார்.
அவர் தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதே போன்று நடிகர் பாலகிருஷ்ணா திரைப்படத்துறை அமைச்சராக நியமிக்கப்பட இருக்கிறார். அதன் பிறகு ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டதோடு உள்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த பட்டியல் வெளியாகி ஆந்திர அரசியலில் பரபரப்[பை ஏற்படுத்திய நிலையில் இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை.
