தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் பலரும் சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனால் பயணிகளின் வசதிக்காகவும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் தெற்கு ரயில்வே 60 சிறப்பு ரயில் சேவைகளை இயக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

அதன்படி சென்னை நாகர்கோவில் இடையே 11 ரயில் சேவை, சென்னை மற்றும் நெல்லை இடையே எட்டு ரயில் சேவை, கொச்சுவேலி மற்றும் பெங்களூரில் இடையே நான்கு ரயில் சேவை, சென்னை மற்றும் சந்திரகாசி இடையே ஆறு ரயில் சேவை, சென்னை மற்றும் புவனேஸ்வர் இடையே ஆறு ரயில் சேவை, நாகர்கோவில் மற்றும் பெங்களூர் இடையே ஆறு ரயில் சேவை, நாகர்கோவில் மற்றும் மங்களூர் இடையே ஆறு ரயில் சேவை, சென்னை மற்றும் மங்களூர் இடையே ஆறு ரயில் சேவை, நெல்லை மற்றும் சென்னை இடையே ஆறு ரயில் சேவை, எர்ணாகுளம் மற்றும் தன்பாத் இடையே ஒரு ரயில் சேவை என மொத்தம் 60 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.