மதுரை மாவட்டத்தில் உள்ள எம் கே புரத்தில் திருமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 78 வது வார்டில் திமுக வட்ட செயலாளராக இருக்கிறார். இவருக்கு பதவி வழங்கியது சக உறவினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாக தெரிகிறது. நேற்று முன்தினம் திருமுருகன் நள்ளிரவு வழக்கம்போல் தனது வீட்டு திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென வந்த மர்ம நபர்கள் திருமுருகனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் படுகாயமடைந்த திருமுருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திருமுருகனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.