தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடித்த திரைப்படங்களைத் திரையரங்குகள் மற்றும் தொலைக்காட்சிகளில் திரையிடத் தடை விதிக்க வேண்டும் என்று மதுரை காங்கிரஸ் நிர்வாகி செய்யது பாபு தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.

​விஜய் தற்போது ஒரு அரசியல் கட்சியின் தலைவராகச் செயல்பட்டு வருவதால், அவர் நடித்த திரைப்படங்கள் வாக்காளர்கள் மத்தியில் ஒருவித செல்வாக்கை (Influential Impact) ஏற்படுத்தும் என்றும், இது தேர்தல் விதிமுறைகளுக்கு முரணாக அமையக்கூடும் என்றும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் நேரத்தில் ஒரு நடிகரின் பிம்பம் வாக்காளர்களின் மனநிலையை மாற்ற வாய்ப்புள்ளதாக அவர் முன்வைத்துள்ள இந்த வாதம், தற்போது தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

​ஏற்கனவே விஜய் கட்சி தொடங்கிய பிறகு பொது நிகழ்ச்சிகளில் ஈடுபடும் நிலையில், படங்களைத் தடை செய்யக் கோரும் இந்த மனு, திரையுலகம் மற்றும் அரசியல் வட்டாரத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. தேர்தல் ஆணையம் இந்த மனுவின் மீது என்ன மாதிரியான நடவடிக்கையை எடுக்கப்போகிறது என்பதுதான் தற்போதைய ஹாட் டாபிக்.