தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் வி ஏ துரை காலமானார். இவருக்கு வயது 59. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட தொடர் சிகிச்சையில் இருந்து வந்த இவர் நேற்று இரவு சென்னையில் அவரது வீட்டில் காலமானார். இவர் பிதாமகன், கஜேந்திரா, என்னம்மா கண்ணு, லூட்டி, விவரமான ஆளு மற்றும் லவ்லி உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்து உள்ளார்.

இவரது மறைவுக்கு திரை உலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். முன்னதாக நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த இவர் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் அவதிப்பட்டதை அறிந்த சினிமா பிரபலங்கள் பலரும் இவருக்கு உதவி செய்தது குறிப்பிடத்தக்கது.