தமிழக அரசியல் களம் தற்போது தவெக தலைவர் விஜய்யை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் சமீபத்திய கருத்துக்கள் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

ஆரம்பத்தில் விஜய்யை ஆர்.எஸ்.எஸ்-ன் குழந்தை என்று கடுமையாக விமர்சித்து வந்த திருமாவளவன், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, விஜய்க்கு விழுந்த வாக்குகள் அனைத்தும் பாஜக-விற்கு எதிரான வாக்குகள் என்று பேசி வருவது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் இப்படி அந்தர் பல்டி அடிப்பது அவர் அணி மாறுவதற்கான அறிகுறியோ என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

குறிப்பாக ‘அதிகாரத்தில் பங்கு’ என்ற விசிக-வின் நீண்டகால கோரிக்கையை விஜய் ஏற்றுக்கொண்டால், தமிழக அரசியலில் ஒரு மெகா கூட்டணி மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கணிப்பதையே இந்த வார்த்தை பரிமாற்றங்கள் காட்டுகின்றன.