சமீப காலங்களாக திருமண வைபவத்தில் நடக்கும் வேடிக்கையான சம்பவங்கள் காணொளியாக சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகும். அப்படி தற்போது காணொளி ஒன்று வெளியாகி உள்ளது. அந்த காணொளியில் மணமகனும் மணமகளும் திருமணம் முடிந்து சுற்றி வரும் போது சுற்றி இருந்த உறவினர்கள் சிலர் மலர்களை தூவி வாழ்த்துவதை விட்டுவிட்டு மலர்களை அதிக அளவில் வீசி விளையாடி உள்ளனர்.

அப்போது திருமணத்தை நடத்தி வைக்க வந்த புரோகிதரின் மீதும் மலர்கள் விழுந்து உள்ளது. இதனால் கோபமடைந்த அவர் தனது கையில் வைத்திருந்த மலர் தட்டை உறவினர்களின் மீது கோபமாக வீசுகிறார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. இந்த காணொளிக்கு நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

https://x.com/gharkekalesh/status/1872232526313652414