ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்னூல் மாவட்டத்தில் பெனுமடா என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் வம்சி என்ற வாலிபர் கலந்து கொண்டார். இவர் அமேசான் நிறுவனத்தின் உயர் ரக வேலை பார்த்து வருகிறார். இவருடைய நண்பருக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் வம்சி சக நண்பர்களுடன் கலந்து கொண்டார். அப்போது மணமக்களுக்கு அனைவரும் பரிசு கொடுக்கும்போது வம்சி திடீரென பதற்றமாக காணப்பட்டார்.
அவர் மனமேடையில் தன் நண்பர்களிடம் ஏதோ சொல்ல முயன்றபோது திடீரென மயங்கி விழுந்துவிட்டார். அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் சமீப காலமாக திருமண மேடைகளில் நடனமாடுதல் மற்றும் உடற்பயிற்சி செய்யும்போது மயங்கி விழுந்தும் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
స్నేహితుడి వివాహా వేడుకలో గుండెపోటుతో యువకుడు మృతి
కర్నూల్ జిల్లా కృష్ణగిరి మండలం పెనుమడ గ్రామంలో స్నేహితుడి వివాహ వేడుకలో గిఫ్ట్ ఇస్తూ స్టేజ్ పైనే గుండెపోటుకు గురైన వంశీ అనే యువకుడు.
వంశీని డోన్ ప్రభుత్వ ఆసుపత్రికి తరలించిన తోటి స్నేహితులు.. కానీ అప్పటికే గుండెపోటుతో… pic.twitter.com/Ve1Epmf1fI
— Telugu Scribe (@TeluguScribe) November 21, 2024
