கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பகுதியில் அனூப் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக சௌமியா என்ற 31 வயது பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதில் சௌமியா டாக்டராக இருக்கிறார். இந்நிலையில் திருமணம் ஆகியும் நான்கு வருடங்களாக குழந்தை இல்லாததால் சௌமியா மிகுந்த மனவேதனையில் இருந்ததோடு இதற்காக மனநல சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார். அதோடு பல் டாக்டர் ஆக இருக்கும் சௌமியாவுக்கு சரி வர வேலையும் அமையவில்லை. இந்நிலையில் சம்பவ நாளில் வீட்டில் அனைவரும் இரவு உணவு முடித்துவிட்டு தூங்குவதற்காக சென்றனர்.

மறுநாள் அதிகாலை சௌமியாவை அறையில் காணாததால் அவருடைய கணவர் தேடியுள்ளார். அப்போது குளியல் அறையில் கத்தியால் கை மற்றும் கழுத்தை அறுத்துக் கொண்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்காக போராடிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய கணவர் உடனடியாக தன் மனைவியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். ஒரு தனியார் மருத்துவமனையில் சௌமியாவுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.