திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வகையில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அது முடிந்த விடும் என்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் முன்கூட்டிய தரிசனம் செய்ய டிக்கெட் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி இருப்பதை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் திருப்பதி தரிசன டிக்கெட் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி கோவிலில் பிப்ரவரி 22 முதல் 28 வரை கட்டண சேவைகளில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் நாளை பிப்ரவரி எட்டாம் தேதி காலை 10 மணி முதல் www.tirupathibalaji.gov.inஎன்ற இணையதளத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்யும் பக்தர்களுக்கு குலுக்கல் முறையில் டிக்கெட்டுகள் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.